கரூர் மாவட்டம் தாந்தோணி காவல் எல்லைக்கு உட்பட்ட பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் ரவிக்குமார் மகன் வடிவேல் (23). இவர் இப்பகுதியில் உள்ள பேருந்துகள் கட்டமைக்கும் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றிவருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான வடிவேல் திருமணத்திற்கு பின்பும் குடிப்பழக்கத்தை தொடர்ந்துள்ளார். இதனால், வடிவேலுக்கும் அவரது மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
குடும்பத் தொல்லைகளிலிருந்து விடுபட குடிமகனின் விபரீத முடிவு!
கரூர்: குடிப்பழக்கத்துக்கு ஆளானதால் விரக்தியில் குடும்பத் தொல்லைகளிலிருந்து விடுபட இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய வடிவேல் வழக்கம்போல் குடிபோதையில் வந்துள்ளார். இதனால், கோபமடைந்த அவரது மனைவி கோபித்துக்கொண்டு திருப்பூரில் உள்ள அவரது தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனிடையே தாய் வீட்டிற்குச் சென்ற மனைவி திரும்ப வராததால் விரக்தியடைந்த வடிவேல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாந்தோணிமலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
குடிப்பழக்கத்திற்கு ஆளாகி மன விரக்தியில் வடிவேல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.