தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெற்றோர் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் - கரூர் மாவட்டச் செய்திகள்

கரூர்: வேலைக்குப் போகச் சொல்லி பெற்றோர் திட்டியதால் விரக்தியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

youth commite suicide after his parents blame  கரூர் மாவட்டச் செய்திகள்  மணவாசி இளைஞர் தற்கொலை
வேலைக்குப் போகச் சொல்லி திட்டிய பெற்றோர்: விரக்தியில் தற்கொலை செய்த இளைஞர்

By

Published : Jan 14, 2020, 10:47 PM IST

கரூர் மாவட்டம் வெள்ளியணையை அடுத்துள்ள மணவாசி பெரியார் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (20). பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், கூலி வேலைக்குச் சென்றுவந்துள்ளார். கடந்த சில மாதங்களாக இவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அவரின் பெற்றோர் ஏன் வேலைக்கு போகவில்லை எனக் கேட்டு திட்டியதாகத் தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த கார்த்திக் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம்பார்த்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இளைஞரின் உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: முட்புதரில் ஆண் சடலம் - போலீஸ் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details