கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், தடையை மீறி வெளியே சுற்றுவது, பொது இடத்தில் சமைத்து சாப்பிடுவது போன்ற செயல்களில் மக்கள் ஈடுபடுகின்றனர். எனவே அவர்களை காவல் துறையினர் தொடர்ச்சியாக கண்டித்து வருகின்றனர்.
அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் வாங்கல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், விவசாய தோட்டத்தில் சிக்கன் சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி சாப்பிடுவதை டிக் டாக் செயலியிலும் பதிவிட்டுள்ளனர். இந்தக் காணொலி டிக் டாக்கில் வைரலானதை தொடர்ந்து சில சமூக செயற்பாட்டாளர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.