தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: இளைஞர் தற்கொலை! - குற்றச் செய்திகள்

கரூர்: பசுபதிபாலையம் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.

young man committed suicide
young man committed suicide

By

Published : Jun 9, 2021, 2:34 PM IST

கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் ஏவிபி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் சிவகுருநாதன் (18) எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்.

ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்த சிவகுருநாதன், அடிக்கடி செல்போன் மூலம் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் இது குறித்து விசாரித்தபோது பெண் ஒருவரை காதலித்து வருவது பெற்றோருக்குத் தெரியவந்தது .

இதனால் பெற்றோர் சிவகுருநாதனை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிவகுருநாதன் நேற்று (ஜூன் 8) அவரது வீட்டிலுள்ள அறையில் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பசுபதிபாளையம் காவல் துறையினர், இளைஞனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details