கரூர்:அம்மன் வழிபாடு என்பது ஆடி, ஆவணி மாதங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாடாகும். கரூர் மாவட்டம் தோகைமலை அருகேயுள்ள பொருந்தலூரை அடுத்த சின்னரெட்டிபட்டியில் பெரியக்காண்டியம்மன் கோயில் உள்ளது.
உலக மக்கள் பொது அமைதி வேண்டியும், கரோனா 3ஆவது அலையை முற்றிலும் தடுக்கவும், மழை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் 1,108 குத்துவிளக்கு பூஜை நேற்று நடந்தது. பூஜையில் பங்கேற்ற பெண்கள் 5 முக பித்தளை குத்துவிளக்குகளை எடுத்து வந்திருந்தனர்.
பூஜைக்கு வந்த பெண்களுக்கு மகாலெட்சுமி யந்திரம், வெண்கல அன்னபூரணி திரு உருவ சிலை, பூஜைபொருள்கள் அனைத்தும் கோயில் நிர்வாகம் சார்பாக ஒவ்வொரு பெண்ணுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.
1 லட்சத்து 108 வெற்றிலைகளால் அலங்காரம்
குத்துவிளக்கு பூஜையில் 1,008 பெண் பக்தர்கள் விளக்கேற்றி மாங்கல்யம் நீடித்திருத்தல், வறுமையை ஒழித்தல், குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துதல், தொழில், கல்வியில் சிறந்து விளங்குதல், சமூக ஒற்றுமை, உறவினர்கள் ஒற்றுமை என பல்வேறு வரம் கேட்டு குங்குமம், துளசி, மலர், மஞ்சள், தானியம் உள்பட பல்வேறு பொருள்களை கொண்டு தூவி வழிபட்டனர்.
1 லட்சம் வெற்றிலைகளில் நூதன வழிபாடு பின்பு கோயில் வளாகம், பெரியக்காண்டியம்மன், சப்தகன்னிமார் அம்மனுக்கு 1 லட்சத்து 108 வெற்றிலைகளால் அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து தீபாதாரனை காண்பிக்கபட்டு பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. இப்பூஜையில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பம்: நாளை கடைசி நாள்