தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிலம்பத்தில் உலக சாதனை செய்த கரூர் இளைஞர் - சிலம்பத்தில் உலக சாதனை செய்த கரூர் இளைஞர்

கரூர்: சிலம்பத்தை தொடர்ச்சியாக 31 நிமிடங்களுக்கு மேல் சுழற்றிய இளைஞருக்கு நோபல் உலக சாதனை அமைப்பு, கேடயம் வழங்கி கௌரவித்தது.

silambatam

By

Published : Sep 30, 2019, 3:10 PM IST

கரூரை அடுத்த புன்னம்சத்திரம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிலம்பத்தில் மாபெரும் உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கரூர், திருச்சி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், தேனி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து வயது முதல் 20 வயதுக்குட்பட்ட அரசு, தனியார் பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில் தொடர்ந்து அரை மணி நேரம் ' நான்கு வீடு' என்ற முறையிலான சிலம்பம் சுழற்றும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சிலம்பம் அகாடமியை சேர்ந்த அவினாஷ் என்பவர் தொடர்ந்து 31 நிமிடம் 31 விநாடிகள் சிலம்பத்தை சுழற்றி நோபல் உலக முயற்சியை நிகழ்த்தி காட்டினார்.

இதையடுத்து சாதனை நிகழ்த்திய அவினாஷூக்கு கேடயம், சான்றிதழ்களை நோபல் உலக சாதனை அமைப்பு வழங்கியது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details