தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 16, 2020, 1:29 AM IST

ETV Bharat / state

சட்டப்பேரவை தேர்தலில் தொழிலாளர்களின் வாக்குகள் பாஜக-வுக்கே சேரும்- பாண்டிதுரை!

கரூர்: தமிழ்நாட்டில் வருகின்ற 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், தொழிலாளர்களின் 70 சதவீதம் வாக்குகள் பாஜக-வுக்கே சேரும் என பாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் பாண்டிதுரை தெரிவித்துள்ளார்.

Workers' votes will go to BJP in Assembly elections - Pandithurai!
2021 சட்டப்பேரவை தேர்தல்

கரூர் மாவட்டம் தான்தோன்றி மலைப்பகுதியிலுள்ள தனியார் கூட்டரங்கில் பாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பிரதமர் பிறந்தநாள் விழா, தீன் தயாள் உபத்தயாயா பிறந்தநாள் விழா, காந்தி ஜெயந்திவிழா என முப்பெரும் விழா, அமைப்பின் மாவட்ட தலைவர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், தொழிற்சங்க மாநில செயலாளர் மதுக்குமார்,பிஜேபி கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட மாவட்ட அளவிலான தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் பாண்டிதுரை கூறியதாவது, "இதுவரை ஆட்சி செய்து வந்த பிரதமர்கள் ஏழைகள்,அமைப்புசார தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் வகுக்கவில்லை.

ஆனால் 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட மோடி, தொழிலாளர்களுக்கும், குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்கள் வகுத்து செயல்படுத்தி வருகிறார்.

இன்றைய தினம் வாக்காளர்களில் 70-சதவீதம் பேர் அமைப்புசாரா தொழிலாளர்களாக உள்ளனர். வரும் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாட்டில் 70 சதவீதம் தொழிலாளர்களின் வாக்கு பாரதிய ஜனதா கட்சிக்கே சேரும்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details