கரூர் அருகே மூக்கணாங்குறிச்சி பெரியார் நகரில் வசிக்கும் சென்ட்ரிங் தொழிலாளி நாகராஜன். இவர் தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்துவருகிறார்.
கடந்த 40 நாள்களாக தொடர்ந்துவரும் ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வருமானம் ஏதுமின்றி வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி சிரமப்பட்டுவந்தார்.
இவரால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் வீட்டைக் காலி செய்யுமாறு நாகராஜனை கடந்த 10 நாள்களாகக் கட்டாயப்படுத்திவந்துள்ளார்.