தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பனை ஓலை பின்னல் தொழிற்பயிற்சி: ஆர்வத்துடம் பங்கேற்கும் பெண்கள்! - கரூர் மாவட்ட பெண்களுக்கு பனை ஓலை பின்னல் பயிற்சி

கரூர்: கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குள்பட்ட பெண்களுக்குப் பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் மூலம் பனை ஓலை பின்னல் தொழிற்பயிற்சி நடத்தப்பட்டுவருகிறது. இதில், அப்பகுதி பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுவருகின்றனர்.

பலை ஓலை பின்னல் பயிற்சி
பலை ஓலை பின்னல் பயிற்சி

By

Published : Oct 8, 2020, 6:00 PM IST

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குள்பட்ட வரவனை ஊராட்சியிலுள்ள வ. வேப்பங்குடி கிராமத்தில் பெண் தொழில்முனைவோரை உருவாக்குவதன் மூலம் பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும் என்பதைக் கருத்தில்கொண்டு, பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் மூலம் மகளிருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியை பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் மூலம், நரேந்திர கந்தசாமியின் தலைமையில் பயிற்சி நடத்தப்பட்டுவருகிறது. இந்தப் பயிற்சியை, பயிற்சியாளர் விக்டோரியா பனை ஓலைகளை வைத்து, வீட்டு உபயோக பொருள்களான கூடை, பெட்டி, அழகுப் பொருள்கள், விசிறி போன்றவற்றைத் கற்க பெண்களுக்கு ஆலோசனை வழங்கிவருகிறார்.

பலை ஓலை பின்னல் பயிற்சியில் ஈடுபடும் பெண்கள்

இந்தப் பயிற்சியால் அப்பகுதியிலுள்ள பெண்கள் பலர் பயனடைந்துவருகின்றனர். வெளிநாட்டிலிருக்கும் நரேந்திர கந்தசாமி, பசுமைக்குடி என்ற தன்னார்வ அமைப்பை உருவாக்கி, அப்பகுதியில் மரங்களை வைத்து பசுமையாக்கியது மட்டுமல்லாமல் பெண்களுக்கு தொழிற்பயிற்சி அளித்துள்ளது, அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்கை விசாரிக்க தனி காவலர்!

ABOUT THE AUTHOR

...view details