தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி விபத்தில் முதன்மைக் கல்வி அலுவலக பெண் ஊழியர் உயிரிழப்பு! - கரூரில் பெண் உயிரிழப்பு

கரூர்: சேலம்-மதுரை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட லாரி விபத்தில், முதன்மைக் கல்வி அலுவலக பெண் ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

லாரி விபத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் பெண் ஊழியர் உயிரிழப்பு!
Women dead in lorry accident

By

Published : Sep 15, 2020, 5:44 PM IST

கரூர் மாவட்டம், சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணல்மேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளம்பெண், லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்து அரவக்குறிச்சி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக பெண் ஊழியர் கீதா(27) என்பது தெரியவந்தது. மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details