தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் விவசாயி தற்கொலை - Police are investigating

கரூர்: கணவருடன் தொடர்ந்த பிரச்னை காரணமாக பெண் விவசாயி தற்கொலை செய்துகொண்டார்

பெண் விவசாயி தற்கொலை
பெண் விவசாயி தற்கொலை

By

Published : Apr 25, 2020, 1:14 PM IST

கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லை காலனியில் முருகன், பொன்மணி (20) தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டு விவசாயத்தை பிரதான தொழிலாக செய்துவந்துள்ளனர். இவர்களுக்கு ஒன்பது மாத குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இருவரும் சண்டையிட்டுக் கொள்வது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். அருகிலிருந்தவர்கள் கிணற்றில் விழுந்த பொன்மணியை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக கூறினார்கள். மேலும் இதுகுறித்து குளித்தலை சார் ஆட்சியர் அப்துல் மேற்பார்வையில் தோகைமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: எங்கள் நிலத்தில் அடக்கம் செய்துகொள்ளலாம் - ஒன்பதாம் வகுப்பு மாணவி பிரதமருக்கு கடிதம்

ABOUT THE AUTHOR

...view details