தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில் நிலையம் அருகே பெண் தீக்குளிப்பு! - கரூர் ரயில்வே ஜங்ஷன்

கரூர்: ரயில்வே ஜங்சன் அருகே பெண் ஒருவர் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயில் நிலையம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை -காவல்துறை விசாரணை
ரயில் நிலையம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை -காவல்துறை விசாரணை

By

Published : Sep 8, 2020, 9:27 PM IST

கரூர் பழைய ரயில் நிலையம் அருகே உள்ள மருத்துவமனை முன்பு சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற கரூர் நகர காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் தற்கொலை செய்து கொண்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

ABOUT THE AUTHOR

...view details