கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பணப்பட்டுவாடா நடக்காமல் இருக்க ஆங்காங்கே காவல்துறை சார்பில் சோதனை சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
'எந்த கட்சி பணப்பட்டுவாடா செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கபடும்' - கரூர் எஸ்.பி - பணப்பட்டுவாடா
கரூர்: அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் எந்த கட்சி பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கரூரில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட கண்காணிப்பாளர் விக்ரமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 250 இடங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டதோடு, பணப்பட்டுவாடா உள்ளிட்ட சட்டத்திற்குப் புறம்பான அனைத்து நடவடிக்கையும் தடுக்க 36 பறக்கும் படைகள், 18 புள்ளியியல் துறை நிபுணர்கள் கொண்டு 29 சோதனைச்சாவடிகள் தற்போது வரை அமைக்கப்பட்டுள்ளது.
தேவைப்படும் பட்சத்தில் சோதனைச் சாவடிகளை கூட்டவும், குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். நாளிதழ்களில் வரும் செய்தியை பார்த்துவிட்டு நடவடிக்கை மேற்கொள்ளவதை விட நானே நேரில் பார்த்து நடவடிக்கை எடுத்து செய்தியாளர்களுக்குத் தர விரும்புகிறேன்" என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.