கரூர் மாவட்ட நீதிபதி கிரிஸ்டோபர் மாணவர்கள் வங்கியில் வாங்கிய கல்விக்கடனை வங்கியுடன் சமரசம் பேசிமுடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி 'மெகா லோக் அதாலத்' எனப்படும் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற இருக்கிறது. மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகள் சமரசம் செய்துகொண்டு தீர்த்து வைக்கும் நோக்கில் மக்கள் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டுள்ளது' என்றார்.