கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கரோனாவால் பாதிக்கப்பட்ட 135 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கரூரை பொறுத்தவரை சராசரி 10 முதல் 15 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டு வருகிறது. வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து வருபவர்கள் ஏழு நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. தற்போது, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர், உள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரத்தை கண்காணிக்க ஒரு குழு அமைத்துள்ளார்.