மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே குடியிருப்பு பகுதிகள் மற்றும் பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அங்கிருந்த விவசாய தரிசு நிலத்தில் நேற்றிரவு (மார்ச் 16) திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தீ விபத்து - மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தீ விபத்து
கரூர்: மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள விவசாய தரிசு நிலத்தில் நேற்றிரவு (மார்ச்16) ஏற்பட்ட தீ விபத்தினால், சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்கள் எரிந்து சேதமாகின.
![மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தீ விபத்து தீ விபத்து](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11038895-841-11038895-1615947547474.jpg)
காற்றின் காரணமாக இந்தத் தீ மளமளவென பரவ தொடங்கியது. இந்தத் தீ விபத்தில் மரங்கள், செடிகள் எரிந்து நாசமாகின. இது தொடர்பாக கரூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. விரைந்து தீ கட்டுக்குள் கொண்டு வரபட்டதால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டன. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னையில் 3.5 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்!
TAGGED:
தீ விபத்து