தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவாகரத்துக்கு வற்புறுத்தும் கணவன்... குழந்தையை மீட்டுத்தர மனைவி கோரிக்கை! - மாவட்ட ஆட்சியர்

கரூர்: கணவரிடம் இருந்து பத்து மாத குழந்தையை மீட்டுதரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு அளித்துள்ளார்.

revathi

By

Published : Jun 24, 2019, 3:38 PM IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சயில் வசித்து வருபவர் அன்பசரசன். இவரது மனைவி ரேவதி மாலா. இவர்களுக்கு தற்போது பத்து மாத குழந்தை பிறந்தது. அன்பரசன் பைனான்ஸ் தொழில் செய்துவருகிறார்.

இந்நிலையில், அன்பரசன் அவரது பங்குதாரர் மகள் ஒருவரை மணமுடிப்பதற்காக ரேவதி மாலாவை விவாகரத்து செய்ய முடிவு எடுத்தார். இதனையடுத்து ரேவதி மாலாவிடம் வரதட்சணை கேட்டு அவரது தாயார் வீட்டிற்கு அனுப்பி உள்ளார். மேலும் குழந்தையையும் பார்க்கவிடாமல் தடுத்துள்ளார்.

இது குறித்து ரேவதி மாலா காவல்நிலையத்தில் பல முறை மனு அளித்துள்ளார். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கச்வில்லை என கூறப்படுகிறது.

குழந்தையை மீட்டு தரகோரி மனைவி

இதனையடுத்து ரேவதி மாலா இன்று (ஜூன் 24) மாவட்ட ஆட்சியரிடம் குழந்தையை மீட்டுத்தரக் கோரியும் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் மனு அளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details