தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவி, மகள் மாயம் காவல்நிலையத்தில் புகார்... - wife and daughter missing

கரூர்: குளித்தலை அருகே தனது மனைவி, மகளை 13 நாள்களாக காணவில்லையென பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

police-station karur
police-station karur

By

Published : Jan 21, 2020, 10:26 PM IST

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள டி. இடையப்பட்டியில் வசித்து வருபவர் செல்வராஜ், மனைவி ஐஸ்வர்யா(24). இவர்களுக்கு ரத்தினகிரி ஈஸ்வரி என்ற 3 வயது மகள் உள்ளார். ஐஸ்வர்யா திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், ஜனவரி 8ஆம் தேதி காலை ஐஸ்வர்யா மகளுடன் கடவூர் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால், அச்சமடைந்த செல்வராஜ் இருவரையும் தேடியும், விசாரித்தும் வந்துள்ளார்.

பாலவிடுதி காவல் நிலையம்

13 நாள்களாகியும் அவர்களைப் பற்றி எந்தவிதமான தகவலும் கிடைக்காததால் செல்வராஜ் பாலவிடுதி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: டிக்டாக்கில் காதலா? திடீரென்று மாயமான கணவர் ... மனைவி புகார்!

ABOUT THE AUTHOR

...view details