கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையில் நேற்று ஈடுபட்டார்.
'ராகுல் பிரதமரானால் காவிரி நீர் ஒரு சொட்டுக்கூட வராது..!' - முதலமைச்சர் பழனிசாமி - kaveri water
கரூர்: "மத்தியில் ராகுல் காந்தி பிரதமரானால் தமிழகத்திற்கு வந்துக் கொண்டிருக்கும் காவிரி தண்ணீர் ஒரு சொட்டுக்கூட வராது" என்று அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், "ராகுல் காந்தி பிரதமர் ஆனவுடன் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டபடும். ஏனெனில் காவிரி மேலாண்மை கலைக்கப்படும் என்று கர்நாடகாவில் வாக்குறுதியும் அளித்திருக்கிறார். அப்படி அமைத்தால் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் ஒரு சொட்டுக்கூட கிடைக்காது. இதனை நம்பியிருக்கும் 20 மாவட்டங்களிலும் வறட்சியால் பாதிக்கப்படும். ஸ்டாலின் அறிவித்த பிரதமர் வேட்பாளர் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்தால் இப்படிப்பட்ட நிலை உருவாகும். திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி அரசியல்வாதி அல்ல அரசியல் வியாபாரி" என்றார்.