உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோயிலுக்கான பூமி பூஜை இன்று (ஆகஸ்ட் 05) நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால், பல இடங்களில் இந்து முன்னணியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடிவருகின்றனர். அந்தவகையில், கரூரில் புகழ்பெற்ற பசுபதி கல்யாண ஈஸ்வரர் கோயிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ராம பாடல் பாடி இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.
’அத்வானியின் லட்சியத்தை நிறைவேற்றி இருக்கிறோம்’ - ராமர் கோயில் குறித்து அர்ஜூன் சம்பத் கருத்து - Hindu Makkal Katchi arjun sampath
கரூர்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதன் மூலம் அத்வானியின் லட்சியத்தை நிறைவேற்றியிருக்கிறோம் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

arjunsambath
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ராம பக்தியினால் இந்த நாடு இயங்குகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்கிறது. இது அனைவரின் சம்மதத்துடன் நடைபெறுகிறது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ராமர் கோயில் கட்டுவதன் மூலம் அத்வானிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளோம், அவரின் லட்சியத்தை நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம்” என்றார்.
அர்ஜூன் சம்பத்
இதையும் படிங்க:ராமர் கோயிலை எழுப்ப மூலவர்களாக இருந்த அத்வானி, ஜோஷிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா?