கரூர்:முத்துநகர், என்எஸ்பி நகர் பகுதியைச் சேர்ந்த வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்புக்கு பணம் செலுத்தி ஏழு மாதங்களாகியும் இணைப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த செல்வி கூறுகையில், " முத்து நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். ஒவ்வொரு வீட்டுக்கும் ஊராட்சி சார்பில் தனி குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக பணம் செலுத்தி ஏழு மாதங்கள் ஆகிறது.
பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை
இணைப்பு இன்னும் கொடுக்கப்படாததால் தண்ணீர் லாரிகள் மூலம் பணம் கொடுத்து தண்ணீர் வாங்குகிறோம். இனியும் இவ்வாறு வாங்க முடியாது, உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டுள்ளோம்" என்றார்
விரைவில் குடிநீர் வழங்கப்படும்
ஊராட்சி மன்ற தலைவர் கிருபாதி கூறியதாவது, "மத்திய அரசு திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்குவதற்கு அனைத்து பணிகளும் தொடங்கப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளது. நிர்வாக சிக்கல் காரணமாக பணிகள் முடியவில்லை. விரைவில் அலுவலர்களிடம் முறையிட்டு குடிநீர் பெற்றுத் தருவேன்" என்று கூறினார்.
இதையும் படிங்க:தூத்துக்குடியில் பெண்கள் காலிக்குடங்களுடன் போராட்டம்