தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மறைமுக தேர்தலில் குளறுபடி - வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு - மறைமுகத் தேர்தலில் முறைகேடு

கரூர்: தமிழ்நாட்டில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற மறைமுக தேர்தலில் குளறுபடி நடந்திருப்பதாகக் கூறி வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

election issue
election issue

By

Published : Jan 14, 2020, 1:05 PM IST

தமிழ்நாட்டில் கடந்த 11ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தில் எட்டு ஒன்றிய தலைவர் பதவிகள், மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் ஒன்றாவது வார்டு உறுப்பினர் ராஜலிங்கம், இரண்டாவது வார்டு உறுப்பினர் சரண்யா, மூன்றாவது வார்டு உறுப்பினர் சேகர், நான்காவது வார்டு உறுப்பினர் சண்முக தீர்த்தம், ஐந்தாவது வார்டு உறுப்பினர் கவிதா, ஆறாவது வார்டு உறுப்பினர் உஷா, ஏழாவது வார்டு உறுப்பினர் நளினி, எட்டாவது வார்டு உறுப்பினர் உஷாராணி, ஒன்பது வார்டு உறுப்பினர் தனபால் ஆகியோர் ஊராட்சியிலுள்ள வார்டு உறுப்பினர்களாவர். இந்நிலையில், 11ஆம் தேதி மறைமுக தேர்தல் குலுக்கல் முறையில் நடைபெற்றதால், அதில் விருப்பம் இல்லாமல் ஏழு வார்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மேலும் இவர்கள் வெளிநடப்பு செய்ததால், தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் எனக் தேர்தல் அலுவலர்கள் கூறியிருந்தனர். ஆனால், மற்ற உறுப்பினர்களின் அனுமதி இல்லாமல் உஷாராணியை ஒன்றிய துணைத்தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். இதையடுத்து தேர்தல் குளறுபடியாக நடைபெற்றது எனக் கூறி மற்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: தேனி மாவட்டத்தில் மூன்று ஒன்றியங்களில் மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details