தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஸ்வகர்மா சமூகம் அதிமுகவுக்கு ஆதரவு- கரூரில் கூட்டமைப்பு தலைவர் பேட்டி - vishwakarma will support aiadmk

கரூர்: அதிமுகவிற்கு வரும் சட்டப்பேரவை தேர்தலில் விஸ்வகர்மா சமூகத்தினர் முழு ஆதரவையும் அளிப்பார்கள் என விஸ்வகுல சமூக சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் சிவசண்முக சுந்தர பாபுஜி தெரிவித்துள்ளார்.

Sivashanmuga Sundara Babuji Swamy
சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள்

By

Published : Mar 2, 2021, 9:04 AM IST

கரூர் மாவட்டம் வீர கம்மாளர் ஒருங்கிணைப்பு, விஸ்வ மக்கள் சக்தி பேரவை, தமிழ்நாடு- புதுச்சேரி விஸ்வகுல சமூக சங்க கூட்டமைப்பு சார்பில் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 111ஆவது பிறந்த நாள் விழா கரூர் பஸ் நிலையம் ரவுண்டானா அருகே உள்ள அலங்கார விடுதி முன்பு நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் பா.சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கூட்டமைப்பு மாநிலத் தலைவர் சிவசண்முகசுந்தர பாபுஜி சுவாமிகள், தியாகராஜ பாகவதரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’விஸ்வகர்மா சமூகத்தை கூட்டுறவு வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் ஆக நியமிக்க வேண்டும். விஸ்வகர்மா ஜெயந்தி நாளான செப்டம்பர் 7ஆம் தேதியை மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள்

அதை தமிழ்நாட்டில் பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும். திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டு ரூபாய் 22 லட்சம் மதிப்பீட்டில் பணிகளை தொடங்கியிருக்கும் அதிமுகவுக்கு எதிர்வரும் சட்டப்பேரவை பொது தேர்தலில் ஒட்டுமொத்த வாக்குகளையும் வழங்கி மாபெரும் வெற்றியை பெற செய்வோம்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தவுள்ள சீமான்!

ABOUT THE AUTHOR

...view details