கரூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி சமீபத்திய நாட்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது பேசிய செந்தில் பாலாஜி, ”திமுக தலைவர் ஸ்டாலின் முதலமச்சராக பதவியேற்றவுடன், மாட்டு வண்டியில் மணல் அள்ள இருக்கும் தடை அகற்றப்படும்.
தேர்தல் விதிமுறை மீறல்: செந்தில் பாலாஜி மீது அதிமுக புகார்!
கரூர் : தேர்தல் விதிமுறைகளை மீறியதாக செந்தில் பாலாஜி மீது தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகாரளித்துள்ளது.
அலுவலர்கள் யாரும் தடுக்க மாட்டார்கள். ஒரு வேளை அலுவலர்கள் தடுத்தால் தனக்கு போன் செய்யலாம்” எனக் கூறினார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றாமல், அலுவலர்களை மிரட்டும் வகையில் பேசிய செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரிடம் அதிமுக சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அதிமுக - திமுக வார்த்தைப் போர் முதல் ஜெயக்குமாரின் ரிக்ஷா பயணம் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்