தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஆர்கே நகர் பாணியை செந்தில்பாலாஜி மறக்கவில்லை..!' -  விஜயபாஸ்கர் - எம்.ஆர். விஜயபாஸ்கர்

கரூர்: "திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 2000 ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்து, அதிமுகவிற்கு செல்லும் வாக்குகளை தடுக்கிறார்" என்று, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விஜயபாஸ்கர்

By

Published : May 19, 2019, 4:37 PM IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ”அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலம்பாளையம், முல்லை நகர், நொய்யல், காந்திநகர் போன்ற பல்வேறு பகுதிகளில் 30 விழுக்காடுதான் வாக்குகள் பதிவாகி இருக்கிறது.

vijayabaskar

இதற்கு காரணம் செந்தில் பாலாஜி 2000 ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து வாக்காளரிடம் ஒரு பகுதியில் 3 மணிக்கு மேல் 2000 ரூபாய் தருவதாகவும் மற்றொரு பகுதியில் வெற்றி பெற்றபின் தருவதாகவும் எழுதி கொடுத்திருக்கிறார். அவர் ஆர் கே நகரில் டோக்கன் கொடுத்து பழக்கப்பட்டவர். அதை இங்கு பயன்படுத்துகிறார்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details