தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செந்தில் பாலாஜியை மிரட்டிய அதிமுக பிரமுகர்: வெளியான பரபரப்பூட்டும் வீடியோ! - அதிமுக பிரமுகர் மீது வக்குப்பதிவு

கரூர்: தேர்தல் வாக்குப்பதிவு மையத்தில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டிய அதிமுக யூனியன் சேர்மன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செந்தில் பாலாஜியை மிரட்டிய அதிமுக பிரமுகர்
செந்தில் பாலாஜியை மிரட்டிய அதிமுக பிரமுகர்

By

Published : Apr 7, 2021, 4:32 PM IST

கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாங்கல் ஊராட்சியில் வாக்குச்சாவடி மைய எண்:14-ல் அதிமுக கரூர் யூனியன் சேர்மன் பாலமுருகன், நீண்டநேரமாக வாக்குச்சாவடி மையத்துக்குள் இருந்தவாறே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வந்துள்ளார். இது குறித்து திமுகவினர் முறையிட்டும் அங்கிருந்து அவர் வெளியே செல்ல மறுத்துவிட்டார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, அவரது தேர்தல் முகவர்கள், வாக்குச்சாவடியில் சுமார் இரண்டு மணி நேரமாக நின்று வாக்கு செலுத்த வரும் பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு அதிமுக பிரமுகர் பாலமுருகன் வாக்கு சேகரித்ததாக வாக்குச்சாவடி மைய தேர்தல் அலுவலரிடமும், அங்கு பணியிலிருந்த வாங்கல் கிராம நிர்வாக அலுவலரிடமும் முறையிட்டார்.

இதனைத் தொடர்ந்து அங்கு வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, செந்தில் பாலாஜியை அதிமுக பிரமுகர் பாலமுருகன் மிரட்டும் தொனியில் பேசினார். அதன், காணொலி தற்போது வெளியாகியுள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு அன்று மதியம் கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரை சந்தித்து திமுக கரூர் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி புகார் ஒன்றை அளித்திருந்தார்.

செந்தில் பாலாஜியை மிரட்டிய அதிமுக பிரமுகர்

அதில், அதிமுக பிரமுகரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளாத கரூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், வாங்கல் குப்பிச்சிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த், வாங்கல் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் அடிப்படையில், அதிமுக கரூர் யூனியன் சேர்மன் பாலமுருகன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: செக் மோசடி வழக்கு: ராதிகாவுக்கு பிடிவாரண்ட்; சரத்குமார் எஸ்கேப்!

ABOUT THE AUTHOR

...view details