கரூர்:கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் , கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகம், வெங்கமேடு கிழக்கு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய நான்கு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. அனைத்து தடுப்பூசி மையங்களிலும் ஏராளமானோர் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக காத்திருந்தனர்.
பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் முன்பு சுமார் 500-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக, சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் இன்று (ஜூன்.6) 200 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும், அவர்களுக்கு முன்பே டோக்கன் வழங்கப்பட்டு விட்டது என்று பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் தெரிவித்தனர்.