தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 4, 2020, 11:49 PM IST

ETV Bharat / state

ஊரடங்கு எதிரொலி: 300க்கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல்

கரூர்: 144 உத்தரவை மீறி தேவையில்லாமல் சுற்றித் திரிந்த 300க்கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

checking_vehicle
checking_vehicle

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை மீறி கரூரில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இன்று கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையில் கரூரில் உள்ள சர்ச் கார்னர் பகுதியில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சுற்றித்திரிந்த 476 நபர்கள் கைது செய்யப்பட்டு, 313 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மருத்துவமனை அல்லது காய்கறிச் சந்தைக்குச் செல்லும் நபர்களிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் இதுபோன்று சட்டவிரோதமாக வெளியே வருபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பினால் கைது - க.பாண்டியராஜன்

ABOUT THE AUTHOR

...view details