கரூர்:காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கரையோர பகுதிகளை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (ஆக. 6) ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கினார்.
முன்னதாக, குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட திம்மாச்சிபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, மாயனூர் கதவணையை பார்வையிட்டார். தொடர்ந்து கரூர் வேலாயுதம்பாளையம் அருகே தவுட்டுப்பாளையம் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதியை பார்வையிட்டு முகாம்களில் தங்கியுள்ள 250-க்கும் மேற்பட்டோருக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கரூர் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தாழ்வான பகுதிகளிலுள்ள பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அதன் ஒருபகுதியாக, நஞ்சை புகலூர் ஊராட்சி தவுட்டுப்பாளையம் பகுதியில் 79 குடும்பங்கள் மூன்று குழந்தைகள் உள்பட 232 பேர் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டு வருகிறது.