கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்திற்குட்பட்ட ஏமூர் சீத்தப்பட்டி பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிமேகலை, இடைநிலை ஆசிரியை ரமாப்பிரியா. இவர்கள் இருவரும் நேற்று (அக்.21) பள்ளியில் பணி முடித்துவிட்டு அப்பகுதியில் மாரியம்மன் கோவிலை கடக்கும்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் கத்தியைக்காட்டி மிரட்டி 7 1/2 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டனர்.
தலைமை ஆசிரியை மணிமேகலை தங்க நகையை கொடுக்க மறுத்ததால் அவர் மீது கத்தியால் தாக்குதல் நடத்தி தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஆசிரியைகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.