தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளப்பட்டியில் இரண்டு லட்சம் ரூபாய் ஆவணமில்லா பணம் பறிமுதல் - two lakh cash seized during Flying Squad vehicle checking

கரூர்: தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

two lakh cash seized during Flying Squad vehicle checking
two lakh cash seized during Flying Squad vehicle checking

By

Published : Mar 23, 2021, 10:54 AM IST

கரூர் மாவட்டம் முழுவதும் மாவட்டத் தேர்தல் அலுவலர் மலர்விழியின் உத்தரவின்பேரில் தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அரவக்குறிச்சி தொகுதி, பள்ளப்பட்டி, அண்ணாநகர் பகுதியில் வாகனத் தணிக்கையில் பறக்கும் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த விவேக் என்பவரிடம் உரிய ஆவணங்களின்றி இருந்த இரண்டு லட்சத்து 60 ஆயிரத்து 250 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட தொகை அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு சார் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:ஆலம்பாடி அருகே வாகனச் சோதனையில் ஒரு லட்ச ரூபாய் பறிமுதல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details