கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதிக்கு வரும் நபர்களுக்கு, இ-பாஸ் பெற்று தரப்படும் என்ற குறுஞ்செய்தி அலைபேசி எண்ணுடன், கடந்த சில நாள்களாக வாட்ஸ்-அப்பில் பரவியது. இது குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் உத்தரவிட்டார். அதன்படி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்ரமணி, இ-பாஸ் பெற்றுத் தருவதாக பரவிய குறுஞ்செய்தி குறித்து விசாரணை நடத்தினார்.
இ-பாஸ் வேண்டுமா எங்களை தொடர்பு கொள்ளுங்கள் குறுஞ்செய்தி அனுப்பிய இருவர் கைது! - போலி இ பாஸ் இருவர் கைது
கரூர்: சென்னையிலிருந்து, கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி வருபவர்களுக்கு இ-பாஸ் எடுத்து தரப்படும் என பரவிய குறுஞ்செய்தி தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில், தனியார் டிராவல்ஸ் உரிமையாளர் முகமது இலியாஸ் அலி மற்றும் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகியோர் குறுஞ்செய்தி அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து, அரவக்குறிச்சி காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து இ-பாஸ் பெற்று பயணம் செய்த பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்த இக்பால் (58), ஷகில் (15), காஜா முகைதீன் (22) ஆகிய மூன்று பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: போலி கால் சென்டர் நடத்தி பண மோசடி: இருவர் கைது