தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் பண்டிகையை பசுமைப் பொங்கலாக மாற்றிய வெளிநாடுவாழ் தமிழர்! - Environment Coordinator

கரூர்: பொங்கல் பண்டிகையை பசுமைப் பொங்கலாக மாற்ற புதிய முயற்சியை கையிலெடுத்த பசுமைக்குடி இயக்கத்திற்கு மக்களிடையே பாராட்டுகள் குவிந்து வருகின்றன

green pongal
green pongal

By

Published : Jan 17, 2020, 1:19 PM IST

கரூர் மாவட்டம், வ.வேப்பங்குடியைச் சேர்ந்த அமெரிக்க வாழ் இளைஞரான நரேந்திரன் கந்தசாமி, தனது சொந்த ஊரை, பசுமையாக்க வேண்டும் என்பதற்காக பசுமைக்குடி என்ற இயக்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலமாக இளைஞர்களை ஒருங்கிணைத்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

அதன் ஒரு பகுதியாக வேப்பங்குடியில் தைத்திருநாளை முன்னிட்டு பசுமைப் பொங்கல் கொண்டாடப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு, நாட்டு காய்கறி விதைகள், மரக்கன்றுகளை பொதுமக்களுக்குப் பரிசாக வழங்கியுள்ளார்.

பசுமைக்குடி இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு விருந்தினராக கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு ஆரோக்கியராஜ் கலந்து கொண்டார். இருவரும் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு நாட்டுக் காய்கறி விதைகளை வழங்கினர்.

பொங்கல் பண்டிகையை பசுமைப் பொங்கலாக மாற்றிய வெளிநாடு வாழ் தமிழர்

மேலும், இந்நிகழ்ச்சியில் பசுமைக்குடி இயக்கத்தின் மணிகண்டன், ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டு நாட்டு விதைகளைப் பெற்றுச் சென்றனர்.

இதையும் படிங்க: ராட்சத ஹீலியம் பலூனில் காவலன் செயலி விழிப்புணர்வு

ABOUT THE AUTHOR

...view details