தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 5, 2019, 6:02 AM IST

ETV Bharat / state

'எம்.ஜி.ஆர் எதிர்த்த திமுகவில் செந்தில் பாலாஜி சேர்ந்துள்ளார்..!' - டிடிவி தினகரன் தாக்கு

கரூர்: "எம்ஜிஆர் எதிர்த்த திமுகவில் சேர்ந்துள்ள செந்தில் பாலாஜிக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்" என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

ttv

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அக்கட்சி சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சாகுல் ஹமீத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட தும்பிவாடி பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் பேசுகையில்,

"திமுக வேட்பாளராக உள்ள செந்தில் பாலாஜி யார் என்று அனைவருக்கும் தெரியும். எம்ஜிஆர் எந்த இயக்கத்தை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ.. எந்த கட்சியை தீய சக்தி எனக் கூறினாரோ.. அந்த கட்சியில் செந்தில் பாலாஜி சேர்ந்துள்ளார். போன வாரம் வரை நம்மோடு இருந்தவர் தற்போது திமுகவில் உள்ளார்.

டிடிவி தீவிர பரப்புரை

அதோடு வேட்பாளராக மக்களை சந்திக்கும் துணிச்சல் வந்து விட்டது என்றால் பதவி வெறிதான் காரணம். எனவே மக்களாகிய நீங்கள் சரியாக தீர்ப்பு வழங்க வேண்டும். மீண்டும் தமிழ்நாட்டில் மக்கள் ஆட்சி தொடர வேண்டும். அதற்கு பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்", என்று வேண்டுகோள் விடுத்தார்.

ABOUT THE AUTHOR

...view details