கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் அருகேயுள்ள அருணாசலம் நகரைச் சேர்ந்த பாஸ்கர், சுதா டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தினார். கரோனா பொதுமுடக்கத்தில் இவருக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் (டிச. 10) நள்ளிரவு சவாரிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய பாஸ்கர், தான்தோன்றி மலையில் உள்ள கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென வேனை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.
அதன் பின்னர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயேபாஸ்கர் உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாந்தோணிமலை காவல் துறையினர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.