கூட்டு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் - தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர்
கரூர்: காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.
காவிரி கூட்டு குடிநீர் திட்டம்
கரூர் மாவட்டம், குளித்தலை, தோகைமலை ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 253 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.52.75 கோடி மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்டு குடிநீர் வழங்குவதற்கான சோதனை இயக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.