கரூர் மாவட்டத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் மக்கும் குப்பையை விவசாயத்திற்குப் பயன்படுத்தி, இயற்கை உரம் தயாரிக்கும் நோக்கத்தோடும் மாவட்டத்தின் முக்கியமான 12 இடங்களில் மக்கும் குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம் அமைக்க அரசு நிதி வழங்கியுள்ளது.
அதன்படி, காந்தி கிராமம், அருகம்பாளையம் உள்ளிட்ட ஆறு பகுதிகளில் இதன் கட்டுமானப் பணி மற்றும் இயந்திரம் பொருத்தும் பணி முடிவுற்று, இயற்கை உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. காந்தி கிராமத்தில் 75 லட்சம் ரூபாய் மதிப்பில் இப்பணி நடைபெறுகிறது.
இந்நிலையில், குப்பையிலிருந்து பிளாஸ்டிக் கழிவு போன்றவற்றைப் பிரித்தெடுத்து உரத்திற்குப் பயன்படும் வகையில் உள்ள மக்கும் குப்பைகளை, இயற்கை உரமாக மாற்றும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், பணியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.