கரூர் மாவட்டம், செங்குந்தபுரம் பகுதியில் இருக்கக்கூடிய அதிமுக கட்சி அலுவலகத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுக கட்சியில் இணையும் நிகழ்ச்சி தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக, அமமுக போன்ற கட்சியிலிருந்து 24 நான்கு பேர் கட்சியில் முக்கிய நிர்வாகியாக இணைந்தனர். மேலும் 1000க்கும் மேற்பட்டோர் கட்சி அலுவலகத்தில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 'அதிமுக கட்சி நிலைக்குமா, நீடிக்குமா என்று ஏளனம் செய்தவர்கள் மத்தியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்திவருகிறார். வருகின்ற 5ஆம் தேதி கரூர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் உள்ள ஒரு கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்.