கரூர் மாவட்டம் திருமாநிலையூர் பகுதியில் இயங்கக்கூடிய போக்குவரத்து கழகம் பணிமனையில் ரூபாய். 2.50 லட்சம் மதிப்பீட்டில் தொழிலாளர்களுக்கான கூடுதல் ஓய்வு அறை கட்டப்பட உள்ளது. இதற்காக இன்று நடைபெற்ற பூமி பூஜையில் தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.
அதைத்தொடர்ந்து ஆச்சிமங்கலம் பகுதியில் சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைப்பதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.