தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் புறநகரப் பேருந்துகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் - கரூரில் புறநகர பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்

கரூர்: புறநகரப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களின் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைத்தார்.

கரூரில் புறநகர பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்!
கரூரில் புறநகர பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்!

By

Published : Feb 13, 2020, 4:37 PM IST

சென்ற ஜனவரி 29ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சரால் 140 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக புதிய குளிர்சாதன நகரப் பேருந்துகள் கரூர் திருச்சி வழித்தடங்களில், கரூர் பரமத்தி வேலூர் வழித்தடங்களில் என இரண்டு நகரப் பேருந்துகள் மற்றும் புதிய புறநகர் பேருந்துகள் கரூர் கொடைக்கானல் வழித்தடங்களிலும், ஈரோடு கும்பகோணம் வழித்தடங்களிலும், திருச்சி ஈரோடு வழித்தடங்களிலும், பள்ளப்பட்டி ஏற்காடு வழித்தடங்களிலும், கரூர் பொள்ளாச்சி என ஆறு புறநகர் பேருந்துகளை இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

கரூரில் புறநகரப் பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்

பின்னர் போக்குவரத்து பணியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை 17 பணியாளர்களுக்கு வழங்கினார். இதில் கரூர் மண்டலத்தில் பதவி உயர்வு பெற்ற நான்கு ஓட்டுநர்கள் நான்கு தினக்கூலி பணியாளர்கள் என மொத்தம் 17 பேருக்கு பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்துவதாக ஐபிஎஸ் மனைவி மீது புகார்

ABOUT THE AUTHOR

...view details