கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசுகள் வழங்கும் விழா: தொடங்கி வைத்த அமைச்சர்! - போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூர்: தமிழ்நாடு அரசின் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘கரூர் மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும். இந்தியாவில் அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியவர்கள் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா. பொங்கல் பரிசு கொடுக்கக் கூடாது என நீதிமன்றம் சென்று தடை வாங்கியது திமுக. ஆனால், ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார். இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ரூ. 2,363 கோடி நிதியை வழங்கியுள்ளார்’ என்றார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனை பின்புறம் அழுகிய நிலையில் ஆண் சிசு; போலீஸ் விசாரணை!
TAGGED:
pongal gift