அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதனின் அறிமுகக் கூட்டம் கரூரில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது,
'செந்தில்பாலாஜியின் வஞ்சகத்தை வீழ்த்த மீண்டும் ஒரு வாய்ப்பு..!' - விஜயபாஸ்கர் கர்ஜனை - முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி
கரூர்: செந்தில்பாலாஜியின் வஞ்சகத்தை வீழ்த்த மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி தேர்தல் என்பது மிக முக்கியமான தேர்தல். ஏனென்றால் சென்ற பொதுத்தேர்தலின் போது அதிக பணப்பட்டுவாடா செய்யப்பட்டதால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்பு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒருவருக்கு வாய்ப்பு அளித்தார். அவரும் அதனை பயன்படுத்திக் கொள்ளாமல் வேறு கட்சிக்கு மாறியதால் அவரது பதவி பறிக்கப்பட்டது. இதனால் அந்தத் தொகுதியில் மறுபடியும் இடைத்தேர்தலை நாங்கள் சந்திக்கிறோம்.
கடந்த முறை அரவக்குறிச்சி தேர்தலில் திமுக வேட்பாளர் கே.சி பழனிசாமியிடம், தற்போதைய வேட்பாளர் செந்தில்நாதன் தோல்வி அடைய காரணமாக இருந்தவர் செந்தில் பாலாஜிதான் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது பதவிக்காக எதிரணியில் இணைந்து களம் காணும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியின் வஞ்சகத்தை வீழ்த்த மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது'என்றார்.