கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆண்டான்கோயில் மேற்கு மற்றும் கிழக்கு ஊராட்சிகளில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளைத் தொடங்கிவைத்தார்.
சாலை அமைக்கும் பணி, தனிநபர் கூட்டுக்குடிநீர் வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை சுமார் 11 கோடியே 27 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் மக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கிவைத்தார்.
'கரூரில் இதுவரை 43 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கல்!' - போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்
கரூர்: கரூரில் இதுவரை அதிமுக அரசு 43 ஆயிரம் நபர்களுக்கு உதவித்தொகை வழங்கியுள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
!['கரூரில் இதுவரை 43 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கல்!' transport minister](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8945560-282-8945560-1601124244439.jpg)
transport minister
பின்பு, ஆண்டான்கோயில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை போன்ற உதவித் தொகைகளை 135 பயனாளிகளுக்கு வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், "இதுவரை கரூர் மாவட்டத்தில் அதிமுக அரசின் சார்பில் 43 ஆயிரம் நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.