கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2020ஆம் ஆண்டுக்கான கைவினைப் பொருட்கள் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெற உள்ள நிலையில் இந்த கண்காட்சியினை ரிப்பன் வெட்டி தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தொடங்கிவைத்தார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்த பலவகை கற்களாலான படிகமாலை, பச்சைநிற கற்கள், சிவப்புநிற கற்கள், மோதிரங்கள், வளையல்கள், கற்களாலான சுவாமி சிலைகள், கற்களாலான கட்சி சின்னங்கள் என பல வகையான கற்களாலான கைவினைப் பொருட்கள் இடம் பெற்றிருந்ததை பார்வையிட்டார்.