தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்டோ ஓட்டுநருக்கு அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவுரை! - ஆட்டோ ஓட்டுநருக்கு அறிவுரை வழங்கிய அமைச்சர்

கரூர்: வெண்ணைமலையில் புகையை கக்கியபடி சென்ற ஆட்டோவை நிறுத்தி, அவற்றை சரிசெய்து ஓட்டும்படி ஓட்டுநருக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவுரை வழங்கினார்.

ஓட்டுநருக்கு அறிவுரை வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
ஓட்டுநருக்கு அறிவுரை வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

By

Published : Jan 24, 2020, 2:57 PM IST

கரூரை அடுத்த வெண்ணைமலையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் காரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது கல்லூரி வளாகத்தை நெருங்கியபோது, அதிக புகைகளைக் கக்கியவாறு எதிரே ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. அவற்றை கவனித்த அமைச்சர், காரிலிருந்து இறங்கி ஆட்டோவை நிறுத்தி, ஆட்டோவை இயக்கிக் காட்டச் சொன்னார்.

ஓட்டுநருக்கு அறிவுரை வழங்கிய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

அப்போது அதிகப்படியான புகை வெளியேறியதை ஓட்டுநரிடம் காட்டி, இதுபோன்று அதிக புகை வெளியேறுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும். ஆகையால், ஆட்டோவை முறைப்படி பராமரித்து இயக்கும்படி அறிவுறுத்தினார். சற்றும் எதிர்பாராத ஆட்டோ ஓட்டுநர் உடனடியாகச் சரிசெய்வதாகக் கூறி அங்கிருந்து சென்றார்.

இதையும் படிங்க: விபத்துகள் குறைந்த மாநிலம் தமிழ்நாடு - எம்.ஆர். விஜயபாஸ்கர் பெருமிதம்

ABOUT THE AUTHOR

...view details