கரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் புதிய மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
விழாவில் பேசிய அமைச்சர், “லாரி ஓட்டுநர்களுக்கு எட்டாம் வகுப்பு படித்தால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் என்ற முறையை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்த்தார். கிராமத்தில் படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதனைச் சொன்னார்.