தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிராமப்புற மக்களின் வாழ்வாதரத்தை முன்னேற்றியவர் ஜெயலலிதா- எம்.ஆர் விஜயபாஸ்கர்.!

கரூர்: கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் முன்னேற அனைத்து திட்டங்களையும் தீட்டியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

MR Vijayabaskar speech
MR Vijayabaskar speech

By

Published : Dec 1, 2019, 4:34 PM IST

Updated : Dec 16, 2019, 8:36 PM IST

கரூர் மாவட்டம் மணவாடி, கம்மாநல்லுர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசின் விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள் வழங்குதல், சுமார் 5கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் அமைப்பதற்கு பூமி பூஜை உள்ளிட்டவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் ஐந்து லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அதன்படி, கரூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக 8ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தியளவில் அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தி காட்டியவர் ஜெயலலிதா. அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களின் மேம்பாட்டினை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நல்லதிட்டங்களை தீட்டியவர் என்றதோடு, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற, விலையில்லா ஆடுகள், விலையில்லா மாடுகள் ஆகியவற்றோடு, தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோழிகளையும் இலவசமாக வழங்கி வருகிறார்.

அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கலந்து கொண்ட விலையில்லா ஆடு வழங்கும் திட்டம்

இதனால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் உயரும் என்ற எண்ணத்தில் பல்வேறு திட்டங்களை வகுத்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில், தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றார்.

இதையும் படிங்க:

புதிய உள்துறைச் செயலராக எஸ்.கே. பிரபாகர் பதவி ஏற்பு!

Last Updated : Dec 16, 2019, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details