நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பல்வேறு துறைகள் நஷ்டமடைந்துள்ளன. இதையடுத்து தற்போது தமிழ்நாட்டில் ஒரு சில துறைகள் தகுந்த இடைவெளி கடைப்பிடித்து இயங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய நபருக்கு உதவி செய்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் - transport minister M. R. Vijayabhaskar
சாலை விபத்தில் சிக்கிய நபரை, எம்.ஆர். விஜயபாஸ்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
![விபத்தில் சிக்கிய நபருக்கு உதவி செய்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7054103-768-7054103-1588593069374.jpg)
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள வர்த்தக சங்கம் மற்றும் ஆடை ஏற்றுமதி குறித்த ஆலோசனை கூட்டத்திற்காக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்றுள்ளார்.
அப்போது ஆட்டையாம்பரப்பு பகுதி நோக்கி அவர் சென்றபோது, சாலை விபத்தில் ஒருவர் சிக்கித் தவித்து வந்துள்ளார். உடனே அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அவரை கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார்.
இதையும் படிங்க:'போக்குவரத்து அனுமதிக்கான பாஸை சென்னை கட்டுப்பாட்டு அறையே வழங்கும்'