கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மலைக்கோவிலூர் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் அரவக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட சுமார் 420 பெண்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் போக்குவரத்து உரிமம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியை கரூர் மாவட்ட அதிமுக அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கலையரசன் ஏற்பாடு செய்தார். நிகழ்வில் பேசிய அமைச்சர், " மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது முதல் தற்போதுவரை அதிமுக அரசு தொடர்ந்து பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்திவருகிறது.