தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி - கரூரில் தொடங்கி வைத்த அமைச்சர் - karur news

கரூர்: முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

District level competition
District level competition

By

Published : Feb 17, 2020, 1:50 PM IST

கரூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இப்போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். மேலும், வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு சான்றிதழுடன் பதக்கமும் வழங்கப்படும் என விளையாட்டுத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:ரயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த ஆதரவற்றோர் 152 பேர் மீட்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details